- Description
- Comment
- Post a comment
தாயே! ஜகன்மாதா, முத்தேவர்களின் தலைவியே, முத்தேவியரின் மூத்தவளே, முத்தொழிலை சரிபார்க்கும் நாயகியே, ஜகத்தை காப்பவளே, ஜகத்தில் காதம்ப வனவாசினியாக திகழ்பவளே, இயற்கை நீதியை காப்பவளே, இயற்கையும் நீயே, கருணையின் சிகரமே, காந்தசக்தி படைத்தவளே, வனத்தில் வசிப்பவளே, காக்கும் கரங்களை உடையவளே, சிம்மவாகினியே, சிந்தனைக்கு அப்பால் உள்ளவளே, மணித்தடாகத்தின் நாயகியே, மங்களமாய் என்றும் திகழ்பவளே, மணிபூராங்கனையே, குண்டலினி ஜோதிசக்தியாய் விளங்குபவளே, மகத்தான உயிர் இனங்களுடன் வாழ்பவளே, மங்கா புகழ் நாயகியே, ஸ்ரீஓம் ஆதிசக்தியின் அம்ச நாயகியே, ஆதித்தனையே ஆள்பவளே, அடிபனிந்தவரை காப்பவளே, அகில உலகமும் புகழும் என் அன்பு தாய் ஸ்ரீஓம் ஜகத்தாத்ரியே உனக்கு எனது அனந்த கோடி நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன்.