- Description
- Comment
- Post a comment
நாம் எல்லோரும் இங்கு விந்தியமலையின் நர்மதையில் இருக்கிறோம் இதன் காரணம் என்ன முதலில் ஜகதாத்ரி வனத்தில் ஸ்ரீஓம் பஞ்சசக்தி பீடத்தை ஆட்சி புரியும் ஸ்ரீஓம் ஆதிசக்தி தேவி பொற்பாத கமலங்களுக்கு எனது அனந்த கோடி நமஸ்காரம், இந்த பஞ்சசக்தி பீடத்தை நிர்வகித்து நம்முடன் எப்பொழுதும் வாழ்ந்து வரும் நமது பொன்னான தலைவிக்கு எனது நமஸ்காரம். எனது தாயாகிய உங்களது குருவை நான் தாயாக அடையப்பெற்றேன். நமது தேவியின் சரித்திரத்தை இங்கு சொல்ல நான் பெரும் பாக்கியத்தையும் பெருமையும் அடைகிறேன். நான் இதுவரை தேவியின் கதைகளை கேட்டு இருக்கிறேன். ஆனால் முழுமையாககேட்கவில்லை ஏதோ கேட்டேன். இந்த சாதுர்ய மாதத்தில் முழுமையாக கேட்டேன். முதல் அனுபவம் எனது முக்கிய அனுபவம் தத்தாத்ரேயர் எந்த ரூபத்திலும் இருப்பார் என்று தேவி சொன்னாள், அதற்கு முன்னே காக்கை வந்து கத்தி விட்டுபோனது, இதுவரை வராதது, வந்தது.பிறகுதான் தேவியின் கதை கேட்டு தெரிந்து கொண்டேன். பிறகு வரவில்லை இது உண்மை சம்பவம் இதில் முக்கிய கதை கணவன் மனைவி படும் கஷ்டம் கங்கை பீஷ்மர், தத்தாத்ரேயர்,ஜமத்கனி முனிவர், பரசுராமர். நமது தேவி ஸ்ரீஓம் ஆதிசக்தி ஒளியில் உருவாகிய, ஜகதாத்ரியிடம் வளர்ந்த நமது தேவியின் இரண்டாவது கதை நம் தேவி பதினெட்டு அவதாரம் எடுத்தாள் அதில் இரண்டாவது அவதாரம் இக்கதையில் உள்ளது.