- Description
- Comment
- Post a comment
என்னங்கானும் என்னைத் தேடி வர என்ன காரணம்?.
என்ன தளிகைக்கு போவதில்லையாமே?.
ஆமாங்கானம் எப்படி நான் போவது? ஆத்துக்காரி இப்படி இருக்கிறாள் அல்லவா?.
என்ன இது நீண்ட நாட்களுக்கு பிறகு!.
நீர் வேற?. எத்தனை வருடங்களா நான் தவம் இருந்தும் ஒரு குழந்தை பேறும் இல்லை. இப்போது தான் அந்த நரசிம்மன் கண்ணை திறந்து இருக்கிறான்.
ஆமாம் நீர் இருப்பதோ திருப்பதி ஆனால் சொல்வது நரசிம்மா, நரசிம்மா என்று இது என்ன ஓய்!.
நன்றாகத்தான் சொல்கிறீர். திருப்பதியில் இருந்தா நரசிம்மா என்று சொல்லக் கூடாதா என்ன?. இந்த பூலோக சக்கரம் சுழல்வதே அந்த நரசிம்மனால்தான்.
இது என்ன சொல்கிறீர்கள்?.
நமது பெருமாள் கையில் சங்கும், சக்கரம், அபய அஸ்தம் இருக்கிறது.
தெரியும்.
உலகம் சுழல்கிறது. பூமிகள், கிரகங்கள் சூரியனை சுற்றி வருகிறது அதே போன்று சதா சர்வ காலமும் உனது எண்ணம் என்னை சுற்றி வந்து கொண்டிருக்க வேண்டும். உனது மனமும் என்னையே சுற்றி வந்தால் நேரமும் காலமும் உன்னை ஒன்றும் செய்யாது. இரண்டையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பகவான் சொல்கிறார்.