- Description
- Comment
- Post a comment
ரேவா என்றொரு ராஜ்ஜியம் இருந்தது ரேவா என்பது அதாவது ஆதிகாலத்தில் மகாபாரத போருக்கு முன்னால் அந்த ராஜ்ஜியம் இருந்தது போருக்கு பின்றனாலும் இருந்து கொண்டு வருகிறது. நமது சகஸ்ர நாமத்தில் ரேவா என்ற சொல் வந்து இருக்கும். இந்த ரேவா என்பது ஒரு சிறப்பான ராஜ்ஜியமாகும். இதில் என்ன சிறப்பு என்றால் மக்கள் நல்ல ஒத்துமையாகவும், அரசன் சொற்படியும் வாழ்ந்து வந்தனர். அரசன் என்ன உத்திரவிடுகிறாரோ அதன்படி நடப்பார்கள். நல்ல ஒரு சிறப்பான ராஜ்ஜியம். இந்த ராஜ்ஜியத்தில் ரகசிய இடங்களும், கஜானாக்களும் இருந்தன செல்வமும் இருந்தது.. நல்ல உயர்ந்த ராஜ்ஜியமாக திகழ்ந்தது இன்றைய காலகட்டத்தில் பிரான்ஸ் ஜெர்மனி போன்ற இடங்களை எல்லாம் இது குறிப்பிடும் என்று சொல்லலாம். மற்றும் இன்றைய காலகட்டத்தில் சொல்லப்படுகின்ற இங்கிலாந்தும் இவர்களை சேர்ந்ததாகத்தான் இருந்தது. அதாவது இப்போது ஐரோப்பியா என்று ஒன்றானது இவை அப்போது அப்படி இருந்தது. இது ஹிட்லருக்கும், முன்னால் ஏசுவுக்கும் முன்னால் எல்லாவற்றிற்கும் முன்னால், மகாபாரதத்திற்கு பின்னால் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராஜ்ஜியம் நல்ல சிறப்பான ராஜ்ஜியமாக இருந்தது, ஆனால் இங்கே என்னவென்றால் மற்றவர்களை அடிமையாக்கும் தன்மை படைத்தவர்கள் என்று சொல்லலாம். மற்றைய தேசத்தவர்களை எல்லாம் அடிமைப்படுத்திக் கொள்வார்கள். அடிமைப்படுத்தி தங்களுடன் அடிமைப்படுத்தி தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று கொடுமை செய்வார்ககள், இது இவர்களுக்கு இயல்பான செயலாக இருந்தது. இவர்கள் இப்படி அடிமையாக்குவதால் பகைகளும் இருந்து வந்தது, என்பதும் தெளிவானது. ஆனால் இவர்களை யாருமே கட்டுப்படுத்த முடியாது, காரணம் ராஜ்ஜியமும் பெரியது அதே போல் இவர்கள் ஆட்சியும் பெரிதாக விளங்கியது. வீரத்திலும், தீரத்திலும் இவர்கள் சிறந்து விளங்கினர். இவர்களை யாராலும் எதிலும் வெல்வதென்பது அவ்வளவு சாத்தியமல்ல. நமது பாரதம் உடபட அனைத்து தேசங்களுமே இவர்களை வெல்ல முடியாது .இவர்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்கினர்