ஸ்ரீ ஓம் விதாதா

காசியில் ஒருவர் இருந்தார் மிக்க செல்வந்தர், அரசனும் வாழ்ந்து வந்தான். இருப்பினும் இவர் தனிப்பட்ட முறையில் நல ...Read more
AUD25.00 each
4.5 5 2 Product


  • Description
  • Comment
  • Post a comment

காசியில் ஒருவர் இருந்தார் மிக்க செல்வந்தர், அரசனும் வாழ்ந்து வந்தான். இருப்பினும் இவர் தனிப்பட்ட முறையில் நல்ல செல்வந்தராக இருந்தார். காசியில் இருந்தார் என்றால் காசி என்னும் இடத்தில் இல்லை தொலைவில் கங்கைகரை ஓரமாக அவர் வாழ்ந்து வந்தார் ஊரில் பெரியவர் , நல்லவர் என்று இவருக்கு பெயர் இருந்தது. மிக்க நல்லவர், நல்ல பெரியவர் என்ற பெயர். இவரது பெயர் ஈஸ்வரன். 

ஈஸ்வரன் எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தார். ஒரு பொழுதும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. அன்னபூரணி என்ன சொன்னாளோ அதே போன்று தன் வீட்டு வாயிலில் யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு அன்னமிட்டு வந்தார். அவரது மனைவி பார்வதி என்று பெயர். ஈஸ்வரன் , பார்வதி என்று பொருத்தமான பெயர். பார்வதியும் கணவன் சொல்லை தட்டாமல் அவர் என்னென்ன எல்லாம் சொல்கிறாரோ, எப்படி எல்லாம் சொல்கிறாரோ அதை எல்லாம் கேட்டு நடந்து கொண்டு வந்தாள்.

பார்வதி..

என்னங்க.

இல்லை, இன்று நமக்கு எவ்வளவு நெல் எல்லாம் வந்து இருக்கிறது என்று கணக்கு பார்த்தேன். பார்த்ததில் நமக்கு நிறைய கிடைத்து இருப்பது போல் தெரிகிறது. ஏன் நமக்கு இவ்வளவு கிடைத்திருக்கிறது?.

என்ன்ங்க நாட்ல ஏன் வரலேன்னு கேப்பாங்க. நீங்க ஏன் வந்தததுன்னு கேக்கறீங்களே?. இது விந்தையா தெரியல உங்களுக்கு.6 

பார்வதி.. ஏன் வந்ததுன்னுதான கேக்கறேன் இதுக்கு பதில் சொல்லேன் பார்ப்போம்.

இதோ பாருங்க என் கணவர் தானத்தில் சிறந்தவர் அதனால் அவர் இன்னும் நிறைய தானம் செய்யட்டும் என்று அந்த இறைவன் வேண்டுமானால் அதிகமாக விளைச்சலை கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்கு இவ்வளவு தான் தெரியும். உங்க அளவிற்கு எனக்கு அறிவு எல்லாம் போதாது. நான் ஒன்றும் குருகுலமும் போகவில்லை. ஒன்றும் தெரிந்து கொள்ளவும் இல்லை. தாங்களே சொல்லுங்கள்.

List of the comments:
No comments have been posted yet.
Vote:

Give your advice about this item:

Username:
E-mail:

Select Currency

Shopping Cart

The cart is empty

Login Form