- Description
- Comment
- Post a comment
விந்தியமலை சிறப்பு வாய்ந்த மலையாக இருந்தது. இது இமையமலையை போல் உயர்வாக இருந்தது. இதற்கு இருபக்கம் இருப்பதால் ஒரு பக்கம் மேகங்கள் வந்து மோதவும், மேகங்கள் மோதியதால் ஒரு பக்கம் மழை அதிகரிக்கிக்கின்றன. அதே போன்று சூரிய ஒளியும் ஒரு பக்கத்தில் அதிகமாக இருக்கிறது. இதனால் இம்மலை நாள் அடைவில் குறைந்து கொண்டே சிறியதாயிற்று. இதையே புராணத்தில் விந்தியமலை கர்வத்தாலும், அகங்காரத் தாலும் ஒங்கி நின்றது என்றும், சூரியன் இந்த மலையின் கர்வத்தை எப்படியாவது அடக்குமாறு கேட்டதாகவும், அப்பொழுது சிவபிரான் அகஸ்தியரை அனுப்பி மலையின் கர்வத்தை அடக்கியதாகவும் சரித்திரம் உள்ளன. ஆனால் நாம் விஞ்ஞானரீதியாக பார்க்கும் பொழுது இதன் காரணம் மேலே குறிப்பிட்டு உள்ளோம். அகஸ்திய மகரிஷியும் விந்திய மலையை கடந்து சென்றார் என்பது உனமை. பலரிஷிகள் இங்கே வாழ்ந்து வந்தனர், முறையாக ஜபமும், தியானமும் செய்து வந்தனர்.
விந்திய மலை ஞானபீடம் ஆதலால் ரிஷிகள் மட்டுமே மலையின் மேல் வாழ்ந்து வந்தனர். மலையின் கீழ் பாகத்தில் மக்கள் வசித்து வந்தனர். பல ஞானிகள் இங்கு வசித்து வந்தனர். ப்ருகு மகரிஷி இவ்விடத்தை விட்டு சென்றவுடன் அகஸ்தியரும் வந்து சென்றார். இதன் பிறகு இங்கே ஒரு பெரிய மகரிஷி இருந்தார். நாம் பெயர்கள் எதுவும் குறிப்பிடவில்லை ஏனெனில் நமக்கு புரிந்து கொள்ள கடினமாக இருக்கும். நாம் பிறகு புராணத்தில் புரிந்து கொள்ளலாம். இவருக்கும் நிறைய சீடர்கள் இருந் தனர். வேத மந்திரங்களை, எடுத்து அதன் கருத்துக்கள், உச்சாடன ரீதிகள் பற்றி எல்லாம் போதித்து வந்தனர், அதே நேரத்தில் இம்மந்திரங்களை வேறு விதமாக உபயோகிக்க கூடும் என்பதனையும் கண்டனர். துர் ஆன்மா க்களை வசியப்படுத்துவதும், மந்திரத்தால் மயக்குவதும் பில்லி, சூன்யம், ஏவல் பற்றியும் மற்றும் எல்லாவிதமான சேஷ்டைகளையும் இவர்கள் கண்டெடுத்தனர்.