- Description
- Comment
- Post a comment
சனகாதியர்களின் ரிஷி ஆஸ்ரமம் இருந்தது. பல ரிஷிகள் இங்கே நல்லவைகளை பயின்று வந்தனர். இங்கே உக்ர ரிஷி என்று ஒருவர் இருந்தார். எதற்க்கு எடுத்தாலும் கோவப்படுவார் சிறுவயது முதல் இப்படி கோவப்பட்டதால் இவருக்கு உக்ர ரிஷி என்றே பெயர் சூட்டப் பட்டன, எதையும் யோசித்து செயல்படமாட்டார், தான் நினைத்ததை செய்வார். யார் சொன்னாலும் கேட்க மாட்டார். குருவிடம் தர்க்கமும், வாக்குவாதமும் செய்து கொண்டே இருப்பார், குரு பக்தி இருந்தது ஆனால் புத்தி சரி இல்லாமல் இருந்தார். அதாவது புத்தி சரி இல்லை என்றால் தக்கமரியாதை அல்லது எப்படி நடக்கவேண்டும் என்பது எல்லாம் கவலை இல்லாமல் தான் போன போக்கில் இருந்து கொண்டு இருந்தார். ஜபதியானங்கள் செய்வார் இருப்பினும் அவசரபுத்தியால் எதிலும் பூர்ணத்துவத்தை அடையவில்லை.
சனகாதியர்களும் எவ்வளவோ நல்லவைகளை எடுத்து கூறினர், உபதேசங்கள் கூறப்பட்டது இருப்பினும் இவர் மாறுவதாக தெரியவில்லை, இவர் கோவமும், தான் போனபோக்கில் இருப்பதும் சனகாதியர்களுக்கு பிடிக்கவில்லை. எத்தனை முறை சொல்வது? இவன் திருந்துவதாக இல்லையே என்று கவலை கொண்டனர். ஒரு நாள் குரு. உக்ரா! நீ இப்படியே போய் கொண்டு இருந்தால் எதையும் சாதிக்காமல் போவாய் நல்லவைகளை ஏன் கற்று கொள்ள மாட்டேன் என்கிறாய்?. .