மார்கழி மாத பூஜைத் தொகுப்பு

மார்கழி மாத பூஜைத் தொகுப்பு
மார்கழி மாதம் என்றாலே, தமிழர்களைப் பொருத்தவரையில் புனிதமான மாதமாகும். பகவத் கீதையில் கூட ஸ்ரீகிருஷ்ணன் “மாதங்களில் நான் மார்கழி” என்றான். மாணிக்கவாசகரின் திருவெண்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும், சைவர்களாலும், வைணவர்களாலும் முறையே இம்மாதத்தில் காலையில் படிக்கப்படுகிறது. பண்டைக்காலத்துப் பெண்கள் இம ...Read more
AUD5.00 each
4.66667 5 3 Product


  • Description
  • Comment
  • Post a comment

மார்கழி மாதம் என்றாலே, தமிழர்களைப் பொருத்தவரையில் புனிதமான மாதமாகும். பகவத் கீதையில் கூட ஸ்ரீகிருஷ்ணன் “மாதங்களில் நான் மார்கழி” என்றான். மாணிக்கவாசகரின் திருவெண்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும், சைவர்களாலும், வைணவர்களாலும் முறையே இம்மாதத்தில் காலையில் படிக்கப்படுகிறது. பண்டைக்காலத்துப் பெண்கள் இம்மாத்தில் நல்ல கனவன் கிடைப்பதற்காக நோண்பிருப்பது வழக்கம். ஆண்டாளின் திருப்பாவையும், வடமதுரை ஆயர்பாடிகள் நோண்பிருப்பதையும், அந் நோண்பை ஸ்ரீகிருஷ்ணனே எடுத்துக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.

 நம் ஸ்ரீஓம் ஆதிசக்தி ஆஸ்ரமம் கூட, மார்கழி மாதத்தை புனிதமாக கருதுகிறது. நம்முடைய ஆசாரியன் ஸ்ரீஸ்ரீ தேவிமா அவர்கள் இப்புனித மாதத்திற்காக விரதம் இருப்பதற்காகவும், நாள் முழுவதும் இறைவனை நினைத்துப் பூஜை செய்வதற்காகவும் பல வழிமுறைகளை நமக்கு கொடுத்துள்ளார்.  யம்சாவில் உள்ள ஸ்ரீஒம் ஆதிசக்தியின் ஆஸ்ரமம், மார்கழி மாதத்தை காேலகாலமாக முக்கால பூஜையுடன் கொண்டாடுகிறது.

ஆஸ்ரமத்திற்கு வரமுடியாதவர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே  விரதமிருந்து பூஜை செய்வதற்காக, ஒரு பூஜைத் தொகுப்பை உருவாக்க ஸ்ரீஸ்ரீ தேவிமா நினைத்தார். அதற்காக ஆஸ்ரமத்தில் செய்யும் அத்தனை பாராயன ஸ்தோத்திரங்களையும் தொகுத்து பக்தர்களுக்கு இங்கு அளித்துள்ளார். இது காலை, மதியம், மாலை என முக்கால பூஜைகள் செய்வதற்கு வசதியாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் இதை மார்கழி மாதத்தில் விரதம் இருந்து, பாராயணம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மற்ற நாட்களில், அவரவர்கள் வசதிக்கு தகுந்தவாறு, ஸ்லோகங்களை எடுத்து பாராயணம் செய்யலாம்.

ஸ்ரீஒம் ஆதிசக்தி ஆஸ்ரமம். அவலூர் – 2015

List of the comments:
No comments have been posted yet.
Vote:

Give your advice about this item:

Username:
E-mail: