- Description
- Specifications
- Post a comment
தஞ்சையிலே வானளாவி நிற்கும் பெரிய கோயிலை எடுத்த இராஜஇராஜ சோழர், எப்பொழுது பட்டம் ஏறினார்? அக்கோயிலைக் கட்டும்போது நடந்த நிகழ்ச்சிகள் என்ன? அவருடைய முதற்போர் எவ்வாறு அமைந்தது? கடற்படையிலும் சோழர் அரசர் வல்லவர் என்ற கருத்தை உண்டாக்கிக் கொடுத்தவர் அவராயிற்றே. அதற்கு என்ன சான்று? வானதி தேவி பெற்ற குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்ற குந்தவை தேவி, தன் கடமையை எவ்வாறு நிறைவேற்றினார் என்பவற்றை விளக்க ஏராளமான சான்றுகள் இருந்தன. அதனால் ‘நந்திபுரத்து நாயகி’யை மூன்று பாகங்களோ’டு நிறுத்திக் கொண்டு பிறகு வாசகர்களைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் அப்பொழுது விடைபெற்றுக் கொண்டேன்.