- Description
- Specifications
- Post a comment
மாநிலம் ஆளும் மன்னர்கள் யுத்தம் செய்வது இயற்கைதான். யுத்தம் செய்யும் அரசர்கள் போருக்கு செல்லும் வீரர்களிடம் ''ஸ்திரீகளையும்,குழந்தைகளையும், வயோதிகர்களையும், பசுக்களையும், கலைஞர்களையும் ஹிம்சிக்கக்கூடாது'' என்று கட்டளை இடுவதுண்டு. அரசர்கள் பொல்லாத மூர்க்கர்களாக, கருணை அற்றவர்களாக இருந்தால் அவ்வளவு சிரத்தை எடுத்துக் கட்டளை இடமாட்டார்கள்.
சிற்பிகளை எல்லாம் காலையும்,கையையும் வெட்டிப்போடு! என்று கட்டளை இடுவது நடக்கக் கூடிய சம்பவமா?
புலிகேசி ராஜ்யத்திலே உலகில் இல்லாத கலை அதிசயங்கள்- என்றும் அழியாதவர்ணங்களில் தீட்டப்பட்ட அற்புத அஜந்தா ஜீவ சித்திரங்கள் உள்ளனவே! அந்த ராஜ்யத்தின் மன்னரா! இப்படி ஒரு ஆணையிட்டார்?
அந்த கொடூர மொழிகளைக் கேட்டு சிவகாமி உணர்விழந்து தரையில் விழுந்தது உண்மையா?
பாறை முனைக்கு இழுத்துப் போய் ''காலையும் கையையும் வெட்டி உருட்டி விடுங்கள்'' என்ற மொழிகள் உண்மையா?