பாரதியாரின் பகவத்கீதை உரை

cover_851005604
பாரதியாரின் கவிதைகளும் அதன் தாக்கமும் நாம் அறிந்ததே. இவர் சுதேசமித்ரன் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த போது, பல கட்டுரைகள் / செய்திகள் வெளியிட்டுள்ளார். பகவத் கீதைக்கு அச்சமயத்தில் உரையும் எழுதியுள்ளார். உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் ...Read more
  • Description
  • Specifications
  • Post a comment

பாரதியாரின் கவிதைகளும் அதன் தாக்கமும் நாம் அறிந்ததே. இவர் சுதேசமித்ரன் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த போது, பல கட்டுரைகள் / செய்திகள் வெளியிட்டுள்ளார். பகவத் கீதைக்கு அச்சமயத்தில் உரையும் எழுதியுள்ளார்.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.

இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.

பகவத் கீதை என்பது ஒவ்வொரு இந்துவின் இல்லத்திலும் இருக்க வேண்டிய வாழ்க்கை நெறிப்புத்தகமாகும். இந்துக்கள் அல்லாதவருக்கும் இது ஒரு வாழ்க்கை வழிக்காட்டியாக பயன்படும். மனசஞ்சலப்படும் போதும், கஷ்டங்கள் அனுபவிக்கும் போதும், இப் புத்தகத்தை படித்தால் மன நிம்மதி யடையலாம் என்பது திண்ணமே.

தேவ மொழியான சமஸ்கிருதத்தில் இருந்து, தமிழாக்கம் செய்ததோடல்லாமல், இதனை பாரதியாருக்கே உரித்தான எளிய நடையில் இப்புத்தகம் உள்ளது. இதனை யாவரும் படித்து பயனடையலாம். தங்கள் இல்லத்தில் பொக்கிஷமாக வைத்திருக்கலாம், அல்லது அச்சடித்து அன்பளிப்பாக கொடுக்கலாம்

Brand URL : https://brahas.com
Vote:

Give your advice about this item:

Username: