- Description
- Specifications
- Post a comment
தமிழ் இலக்கியத்தில் திருவள்ளுவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு. திருக்குறள் காலத்திலும் அழியா இலக்கிய பொக்கிஷமாகும்.
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
பல அளவு திரைகளுக்கு ஏற்றவாறு புத்தகம் வடிவமைக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்ற புத்தகத்தை தரவு இறவிறக்கம் செய்துக்கொள்ளவும்