- Description
- Specifications
- Post a comment
மார்கழி மாத்திற்காக தொகுத்த இப் புத்தகம், மற்ற நாட்களிலும் அவரவர் சௌகரியத்திற்கு தக்கவாறு பாராயணம் செய்யலாம்.
மார்கழி மாதம் என்றாலே, தமிழர்களைப் பொருத்தவரையில் புனிதமான மாதமாகும். பகவத் கீதையில் கூட ஸ்ரீகிருஷ்ணன் “மாதங்களில் நான் மார்கழி” என்றான். மாணிக்கவாசகரின் திருவெண்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும், சைவர்களாலும், வைணவர்களாலும் முறையே இம்மாத்தில் காலையில் படிக்கப்படுகிறது. பண்டைக்காலத்துப் பெண்கள் இம்மாத்தில் நல்ல கனவன் கிடைப்பதற்காக நோண்பிருப்பது வழக்கம். ஆண்டாளின் திருப்பாவையும், வடமதுரை ஆயர்பாடிகள் நோண்பிருப்பதையும், அந் நோண்பை ஸ்ரீகிருஷ்ணனே எடுத்துக்கொடுப்பதாக அமைந்திருக்கும்.பக்தர்கள் இதை மார்கழிமாதத்தில் விரதம் இருந்து, பாராயணம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மற்ற நாட்களில், அவரவர்கள் நேரத்திற்கு தகுந்தவாறு, ஸ்லோகங்களை எடுத்து பாராயணம் செய்யலாம்.