- Description
- Specifications
- Post a comment
'ஜலமோகினி' நான் ஆரம்பத்தில் எழுதிய கதைகளில் ஒன்று. காப்டன் மரியட் போன்ற பல பிரபல ஆங்கில ஆசிரியர்களின் கடல் நவீனங்களைப் படித்தபோது அந்த மாதிரி ஒரு கதையை நம் தாய்நாட்டுச் சரித்திர சம்பந்தமாக எழுத வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அந்த ஆவலின் விளைவுதான் ஜலமோகினி. இந்தக் கதை பூராவும் சொந்தக் கற்பனை என்று சொல்ல முடியாது. 17 வது நூற்றாண்டுக் கப்பல் போர் முறைகள், மாலுமிகளின் வாழ்க்கை முதலியவை பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் பிரபல ஆங்கில ஆசிரியர்களின் அபிப்பிராயங்களையும் ஒரளவு அனுசரித்தே இக்கதையைப் புனைந் திருக்கிறேன்.
கடல் பிராந்தியத்திலுள்ள மாலுமிகளின் பழக்க வழக்கங்கள், கொள்ளைக்காரர்களின் முரட்டுத்தனம், அவர்களுக்கு முன்னுள்ள கட்டுப்பாடு, கப்பல் போரில் ஏற்படும் பயங்கர விளைவுகள் முதலிய பல விவரங்களைக் கூடியவரையில் தத்ரூபமாக இப்புத்தகத்தில் கொடுக்க முயன்றிருக்கிறேன். இவற்றுடன் ஒரு காதல் கதையும் இணைந்து நிற்கிறது.