- Description
- Specifications
- Post a comment
தசரதர் செய்த விசேஷ தவத்தால் மஹா விஷ்ணுவே அவருக்குப் புத்திரனாக அவதாரம் செய்ததும்; சிறுவயதிலேயே மாரீசன் ஸுபாஹு முதலிய கோர ராக்ஷஸர்களை ஜயிக்கும் பலம், வீரியம், எல்லோர்க்கும் அனுகூலமாக இருப்பது, எல்லோருடைய பிரீதிக்கும் பாத்திரமாக இருப்பது, பிறர் செய்யும் குற்றங்களைப் பொறுப்பது, எப்பொழுதும் பிரஸன்னமாக இருப்பது, புன்சிரிப்புடன் பேசுவது முதலிய உத்தம குணங்களும், ராமலக்ஷ்மணர்கள் விசுவாமித்திரருடன் போனதும் அப்பொழுது அவரால் சொல்லப் பட்ட விசித்திரக் கதைகளும், மிதிலையில் ராமன் பரம சிவனுடைய வில்லை முறித்ததும், ராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள், ஸீதை, ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி என்றவர்களை மணம் புரிந்ததும், ராமனுக்கும் பரசுராமனுக்கும் ஸம்வாதமும் இந்தக் காண்டத்தில் சொல்லப்படுகின்றன.