- Description
- Specifications
- Post a comment
ராமனிடத்தில் சேர்ந்திரந்த ஸகல ராஜலக்ஷணங்களும், அவரை யுவராஜாவாக அபிஷேகம் செய்யத் தசரதர் செய்த முயற்சியும், கைகேயி அதைத் தடுத்து ராமனைக் காட்டிற்கனுப்பினதும், நகரத்து ஜனங்கள் பிரலாபித்ததும், தம்முடன் வந்தவர்களை அவர் தமஸா நதிக்கரையில் விட்டுப் போனதும், கங்கைக் கரையில் குஹனைக் கண்டு ஸுமந்திரரை அங்கே நிறுத்திவிட்டதும், கங்கையைத் தாண்டிப் பரத்வாஜரைத் தரிசித்ததும், அவருடைய உத்தரவின் படி சித்திரகூட மலையில் லக்ஷ்மணனால் கட்டப்பட்ட பர்ணசாலையில் ஸீதையுடன் வஸித்ததும், புத்திர சோகம் தாங்காமல் தசரதர் உயிரைவிட்டதும், பரதன் ராமனிடத்திற்கு வந்து அயோத்யைக்கு வரும்படி ப்ரார்த்தித்ததும், ராமலக்ஷ்மணர்கள் பிதாவுக்கு உத்தரக் கிரியைகளைச் செய்ததும், ராமனுடைய மரவடிகளைப் பரதன் நந்திக் கிராமத்தில் அபிஷேகம் செய்து அவருக்காக அங்கே காத்துக் கொண்டிருந்ததும், ரரமன் அத்ரியின் ஆசிரமத்திற்கு வந்ததும், அனஸூயை ஸீதைக்குச் சந்தனம் முதலியவைகளைக் கொடுத்ததும் இந்தக் காண்டத்தின் கதை.