வேங்கையின் மைந்தன் - அகிலன்

cover_1680251114
தென்னிந்தியாவின் அலக்சாந்தர் என்று போற்றப் பெறும் முதலாம் ராஜேந்திரரையும் அவர் காலத்தையும் கதையில் நான் கொண்டுவர விரும்பியதால், முடிந்தவரையில் அவர் சென்ற இடங்களுக்கும் வென்றுவந்த இடங்களுக்கும் நானும் நேரில் சென்றேன். தஞ்சை, சந்திரலேகை (செந்தலை), கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை, நார்த்தாமலை, சித்தன்னவாச ...Read more
  • Description
  • Specifications
  • Post a comment

தென்னிந்தியாவின் அலக்சாந்தர் என்று போற்றப் பெறும் முதலாம் ராஜேந்திரரையும் அவர் காலத்தையும் கதையில் நான் கொண்டுவர விரும்பியதால், முடிந்தவரையில் அவர் சென்ற இடங்களுக்கும் வென்றுவந்த இடங்களுக்கும் நானும் நேரில் சென்றேன். தஞ்சை, சந்திரலேகை (செந்தலை), கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை, நார்த்தாமலை, சித்தன்னவாசல், கொடும்பாளூர் முதலிய தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கும் கடல் கடந்த இலங்கைத் தீவுக்கும் சென்று வந்தேன்.வரலாற்றுக் கால செப்பேடுகளைத் தேடி அலைந்த நான் இப்படியொரு செப்பேட்டுப் பரிசை இந்திய அரசின் சாகித்ய அகாதமியார் 1963-ம் ஆண்டின் சிறந்த தமிழ் நூல் என்ற வகையில் வழங்கப் போகிறார்கள் என்று நினைக்கவில்லை. அத்தோடு இந்தியப் பிரதமர் திரு.ஜவர்ஹர்லால் நேரு அவர்களது கையெழுத்துப் பொறிக்கப்பெற்ற செப்பேடு இந்த நாவலுக்குப் பரிசாகக் கிடைத்திருக்கிறது. வரலாற்றை உருவாக்கிவிட்டுச் சென்றவரின் நினைவாகவும், தமிழ்ப் பெருமக்களின் அன்புச் சின்னமாகவும் அது இன்றைய வரலாறு கூறக் காத்திருக்கும்.

Brand URL : https://brahas.com
Vote:

Give your advice about this item:

Username: